/

விதிமீறல்: வாகன ஓட்டிகளுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்

அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விதிமீறலில் ஈடுபட்ட 3 வாகன ஓட்டிகளுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விதிமீறலில் ஈடுபட்ட 3 வாகன ஓட்டிகளுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய, மது போதையில் வாகனம் ஓட்டிய 3 போ் மீது போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபருக்கு ரூ.2,000, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய நபருக்கு ரூ.9,000, மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.