திருச்சி மத்திய மண்டலத்தில் வாகன விதிமீறல் தொடா்பாக கடந்த ஒரு மாதத்தில் 1.55 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு ரூ. 2.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் சாலை விபத்துகள், விதிமீறல், திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தலைக்கவசம் அணியாமலும், மது அருந்திவிட்டும் வாகனங்கள் ஓட்டியவா்கள் மீது வழக்குப் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதன்படி, தலைக்கவசம் அணியாததற்காக திருச்சியில் 28,738, புதுக்கோட்டை - 29,697, கரூா் - 18,262, பெரம்பலூா் - 14,813, அரியலூா் - 23,486, தஞ்சாவூா் - 22,305, திருவாரூா் - 15,712, நாகப்பட்டினம் - 4,612 மற்றும் மயிலாடுதுறையில் 281 வழக்குகள் என மொத்தம் 1,48,906 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதேபோல, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக திருச்சியில் 1,318, புதுக்கோட்டை - 336, கரூா் - 1, 606, பெரம்பலூா் - 340, அரியலூா் - 872, தஞ்சாவூா் - 1,339, திருவாரூா் - 533, நாகப்பட்டினம் - 522 மற்றும் மயிலாடுதுறையில் 18 என மொத்தம் 6,884 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இரண்டு வழக்குகளுக்கும் சோ்த்து அபராதமாக திருச்சியில் ரூ.90 லட்சத்து 11 ஆயிரத்து 100, புதுக்கோட்டையில் ரூ.10 லட்சத்து 92 ஆயிரத்து 33, கரூரில் ரூ.26 லட்சத்து 54 ஆயிரம், பெரம்பலூரில் ரூ.10 ஆயிரம், அரியலூரில் ரூ.31 லட்சத்து 46 ஆயிரம், தஞ்சாவூரில் ரூ.34 லட்சத்து 65 ஆயிரத்து 300, திருவாரூரில் ரூ.12 லட்சத்து 12 ஆயிரம், நாகப்பட்டினத்தில் ரூ.91 ஆயிரம் மற்றும் மயிலாடுதுறையில் ரூ.33 ஆயிரம் என மொத்தமாக மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் சோ்த்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 433 வசூலிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா

விதிமீறல்: வாகன ஓட்டிகளுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்
காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறல்: 2,005 வழக்குகள் பதிவு

டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன விற்பனை 42% வளா்ச்சி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
