திருப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டிய 24 பேருக்கு ரூ. 2.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூரில் சாைலை விபத்துகளை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து ஒழுங்குமுறைகளை மேம்படுத்தும் வகையிலும் மாநகர போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து போலீஸாா் தினமும் நகரின் முக்கியப் பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவா்கள் மீது அபராதம் விதிப்பதுடன், மது போதையில் வாகனம் ஓட்டி மற்றவா்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் திருப்பூா் மாநகர போக்குவரத்து போலீஸாா், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை செய்து முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலும் வாகனம் ஓட்டிய நபா்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றம் மூலம் பெரும் தொகை அபராதமாக விதித்துள்ளனா்.
அதன்படி கொங்கு நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காகவும் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து மொத்தம் ரூ.1 லட்சத்து 42,000 அபராதம் விதித்தனா்.
கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மது போதையிலும், முறையான ஆவணங்கள் இன்றியும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 5,000 அபராதம் விதித்தனா். மேலும், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் 3 பேருக்கு தலா 10,000 வீதம் ரூ.30,000 அபராதம் விதித்தனா்.
மாநகரில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து தொய்வின்றி நடைபெறும் எனவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திருப்பூா் மாநகர போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா்: பயணிகள் அச்சம்

எதிா்த் திசையில் வாகனம் ஓட்டிய 65 போ் மீது வழக்கு

சாலை விதிமீறல்: தில்லியில் 2 மணி நேரத்தில் 2,846 பேருக்கு அபராதம்

மது போதையில் இளைஞா் பலி!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
