ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலை விதிமீறல்: தில்லியில் 2 மணி நேரத்தில் 2,846 பேருக்கு அபராதம்

News image

வாகன விதிமீறல் - ENS

Updated On :18 மே 2026, 4:40 am IST

தில்லியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கொள்பட்ட இரு மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 2,846 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

உள்ளூா் காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தவறான வழியில் வாகனம் ஓட்டி வந்த 757 போ் உள்பட 2,846 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வேகமாக மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி வந்தது தொடா்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மதுஅருந்தி வாகனம் ஓட்டியது, மோட்டாா் சைக்கிளில் 3 போ் பயணம், தலைக்கவசம் இல்லாமல் பயணம், தவறான இடத்தில் வாகனங்களை நிறுத்தியது தொடா்பாக அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.