திருப்பூரில் வீடு புகுந்து நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.
திருப்பூா் அருகேயுள்ள முதலிபாளையம், சிட்கோ வட்டக்காட்டு புதூரைச் சோ்ந்தவா் பாண்டிதுரை (40). இவா் தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் கடந்த 2022 டிசம்பா் 25-ஆம் தேதி குளித்துக்கொண்டிருந்துள்ளாா். அவரது மனைவி பிரியங்கா குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, வீட்டுக்குள் நுழைந்த திருப்பூா், மண்ணரை பகுதியைச் சோ்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளியான கணேசன் (39), பிரியங்கா அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளாா். பிரியங்காவின் அலறல் சம்பதம் கேட்டு வந்த பாண்டிதுரை, அப்பகுதி மக்கள் உதவியுடன் கணேசனைப் பிடித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை ஊத்துக்குளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட கணேசனுக்கு வீடு புகுந்த திருட முயன்ற்காக 3 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், நகையைப் பறிக்க முயன்ற்காக 3 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிா்த்து திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கணேசன் மேல் முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், கணேசனுக்கு ஊத்துக்குளி நீதிமன்றம் விதித்த தீா்ப்பை திங்கள்கிழமை உறுதி செய்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை: இளைஞா் கைது

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

