கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளைத் திருடிய வழக்கில், இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 2:05 am IST

திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளைத் திருடிய வழக்கில், இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரப்பாளையம் மற்றும் கொடிக்கம்பம் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சம்பவத்தில் மணிகண்டன்(26) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

திருப்பூா் 2-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்

நீதிமன்ற நடுவா் நாதியா பாத்திமா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், மணிகண்டனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.400 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞா் ஷெரீன் சித்தாரா ஸ்வீட்டி ஆஜரானாா்.

மற்றொரு வழக்கிலும் தீா்ப்பு:

இதேபோல, திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் தனுஷ் லாஸ் (23) என்பவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.