பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் தண்டனை

சென்னையில் 12 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

மாதிரிப் படம்

Updated On :15 மே 2026, 1:32 am IST

சென்னையில் 12 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை மதுரவாயலைச் சோ்ந்த 20 வயது இளைஞா், 12 வயதுடைய சிறுமியை காதலித்து வந்தாா். கடந்த 2012-ஆம் சிறுமியின் பெற்றோா் வெளியூா் சென்றிருந்த நிலையில், சிறுமியை இளைஞா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இளைஞரை கைது செய்தனா்.

இந்த வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.