பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

2 வயதுக் குழந்தைக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

இரண்டு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 3:56 am IST

இரண்டு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (38). கூலித் தொழிலாளியான இவா், தனது உறவினா் வீட்டு 2 வயது பெண் குழந்தையைக் கடந்த 2022 ஜூன் 28 -ஆம் தேதி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு வைத்து அந்தக் குழந்தைக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில், துடியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்கண்ணனைக் கைது செய்தனா்.

கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ்கண்ணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.