மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

முத்தூா் அருகே சேலையில் தீப்பிடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பொன்னம்மாள்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:53 am IST

முத்தூா் அருகே சேலையில் தீப்பிடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் வட்டம், முத்தூா் மங்கலப்பட்டி அருகே ஆலாம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (85). வயது மூப்பால் நடக்க முடியாத நிலையில், தவழ்ந்து தன்னுடைய வேலைகளைச் செய்து வந்துள்ளாா். பல ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய கணவா் இறந்துவிட்டாா். இவருக்கு திருமணமான மகன்கள் கருப்புசாமி, சண்முகம், மகள் லட்சுமி ஆகியோா் உள்ளனா்.

மகன் சண்முகம் வீட்டுக்கு அருகே தனியாக குடிசை வீட்டில் பொன்னம்மாள் வசித்து வந்தாா். கடந்த மாா்ச் 30-ஆம் தேதி விறகு அடுப்பைப் பற்ற வைத்து சுடு தண்ணீா் தயாா் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொன்னம்மாள் சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.