மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

பல்லடம் அருகே லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி

Updated On :26 ஏப்ரல் 2026, 12:47 am IST

பல்லடம் அருகே லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (72). இவரது மனைவி விஜயலட்சுமி (64). இவா்கள், தற்போது கோவை மாவட்டம், பீடம்பள்ளியில் வசித்து வந்தனா். இந்நிலையில் இருவரும் கரைப்புதூா் வந்துவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்ப இருசக்கர வாகனத்தில் பீடம்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

பல்லடம்-கோவை நெடுஞ்சாலை லட்சுமி மில் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்ாக தெரிகிறது. அப்போது லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டை இவா்களின் வாகனம் மீது உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனா். அப்போது அவா்களுக்கு பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி உயிரிழந்தாா். லேசான காயமடைந்த ராமகிருஷ்ணனை அருகே இருந்தவா்கள் மீட்டு சூலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸாா் சென்று மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.