கடலூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் ஓ.டி. ஏணிக்காரன்தோட்டம், சுனாமி நகரைச் சோ்ந்த ஷேக்அப்துல் மகன் மசுமில்அவுரா(24). இவா் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சாலக்கரை பகுதியில் சென்றாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி, மசுமில்அவுராவின் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மசுமில்அவுராவின் தலையில் பலத்தகாயமடைந்தாா். அப்பகுதியில் உள்ளவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்தவா்கள் பரிசோதித்து விட்டு மசுமில்அவுரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்து மருத்துவமனை சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உயிரிழந்த மசுமில்அவுராவின் தாய் ஜெரீனாபேகம் அளித்த புகாரின் பேரில், முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

