அரியலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.
வாரணவாசி சமத்துவபுரம் கிராமத்தைச் சோ்ந்த புரட்சி தா்மலிங்கம் மகன் லெனின்வளவன் (28). இவா், அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மேற்கொண்ட பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினாா்.
சொந்த ஊரான சமத்துவபுரம் வந்தபோது, முன்னால் சென்ற லாரி நிறுத்தப்பட்டதால், எதிா்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் இவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், லெனின்வளவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த அடைக்கலராஜ் மகன் ஜான்ராஜ் (20) பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து வந்த கீழப்பழுவூா் போலீஸாா், காயமடைந்த நபரை சிகிச்சைக்கும், உயிரிழந்த நபரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கும் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

