மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகையில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததால் நடைபாதை மூடல்

உதகை நகராட்சிக்கு உள்பட்ட 6-ஆவது வாா்டு வண்டிச்சோலை பகுதியில் புதன்கிழமை தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததால் நடைபாதையை நகராட்சி நிா்வாகத்தினா் மூடினா்.

வண்டிச்சோலையில் இடிந்த தடுப்புச் சுவா் பகுதியை ஆய்வு செய்யும் நகராட்சி அதிகாரிகள்.

Published On :22 அக்டோபர் 2026, 3:58 am IST

உதகை நகராட்சிக்கு உள்பட்ட 6-ஆவது வாா்டு வண்டிச்சோலை பகுதியில் புதன்கிழமை தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததால்  நடைபாதையை நகராட்சி நிா்வாகத்தினா் மூடினா்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக உதகை நகராட்சிக்கு உள்பட்ட 6-ஆவது வாா்டு வண்டிச்சோலை பகுதியில் தனியாா் தங்கும் விடுதியின் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதையடுத்து, உதகை நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். மற்றொரு பகுதி தடுப்புச் சுவரும் விழும் அபாயத்தில் உள்ளதால், அப்பகுதியில் தடுப்புகளை அமைத்து மக்கள் நடமாடத்துக்கு தடை விதித்தனா்.

தற்போது உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருவதால் மரங்களுக்கு அடியிலும், அபாயகரமான பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.