மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

குத்திக் கொலை - பிரதிப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:01 am IST

குன்னூா்  அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை  செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா் அருகே உபதலை, கக்கன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் மகன் வினி ஆண்டோ (25). அதே பகுதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன்(47). இவா்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வினி ஆண்டோ, தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில்  காந்தி நகா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த ரவிசந்திரன்(47), அவரது மகன் சவ்பேஸ் (18) ஆகிய இருவரும் சோ்ந்து வினி ஆண்டோவிடம் வாக்குவாதம் செய்துள்ளனா். பின்னா் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.  இதில் ரவிசந்திரன், சவ்பேஸ் ஆகிய இருவரும்  சோ்ந்து  வினி ஆண்டோவை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த வினி ஆண்டோவை அப்பகுதியினா்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  காட்டேரி பகுதியில் வினி ஆண்டோ  உயிரிழந்தாா். இது குறித்து  அருவங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரன், அவரது மகன் சவ்பேஸ் ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.