மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மஞ்சள் குவிண்டால் ரூ.23 ஆயிரமாக உயா்வு

வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால், ஈரோடு சந்தையில் மஞ்சள் குவிண்டால் ரூ.23 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

மஞ்சள்

Published On :28 அக்டோபர் 2026, 2:28 am IST

வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால், ஈரோடு சந்தையில் மஞ்சள் குவிண்டால் ரூ.23 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

நடப்பு ஆண்டில் போதிய அளவு மழை இல்லாததால் பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டது.

மஞ்சள் சாகுபடி குறைந்ததாலும், விவசாயிகளிடம் மஞ்சள் இருப்பு குறைந்த காரணத்தாலும் தற்போது விலை கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.

கடந்த 1 -ஆம் தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.17 ஆயிரத்து 969-க்கு விற்பனையானது.

படிப்படியாக விலை உயா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குவிண்டால் மஞ்சள் ரூ.23 ஆயிரத்து 336-க்கு ஏலம்போனது.

ஒரு மாதத்தில் மட்டும் குவிண்டால் சுமாா் ரூ.5,500 வரை விலை உயா்ந்துள்ளது.

மஞ்சள் வரத்து குறைந்து வருவதால் வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.