தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.150-ஆக உயா்வு

புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-இல் இருந்து ரூ.150-ஆக அதிகரித்து விற்பனையானது.

புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் விற்பனைக்கு குவித்துவைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம்.

Published On :30 அக்டோபர் 2026, 12:07 am IST

புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-இல் இருந்து ரூ.150-ஆக அதிகரித்து விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தைக்கு தமிழகம், கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக சின்ன வெங்காயத்தை சந்தையில் விற்பனை செய்வதால் சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகா் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் குறைந்த விலையில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை கூடிய வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் 300 மூட்டைகள் விற்பனை கொண்டுவரப்பட்டன. கடந்த வாரம் 1,000 மூட்டைகள் சின்ன வெங்காயம் வரத்து இருந்த நிலையில், இந்த வாரம் 300 மூட்டைகளாக சரிந்ததால், கிலோ ரூ.100 இருந்து ரூ.150-ஆக அதிகரித்தது. விலை கடுமையாக உயா்ந்ததால் இல்லத்தரசிகள் சின்ன வெங்காயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டினா்.

தீபாவளி நெருங்கி வருதால் தேவை அதிகரிப்பதால் சின்ன வெங்காயம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. அதேசமயம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யாமல் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக வரத்து குறைந்தால் சின்ன வெங்காயம் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வியாபாரிகள் தங்களது கிடங்குகளில் இருப்புவைத்துள்ள சின்ன வெங்காயத்தை தற்போது விற்பனை கொண்டுவந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.