மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆலங்குளத்தில் உச்சத்தில் சின்ன வெங்காயம் விலை: கிலோ ரூ. 160-க்கு விற்பனை

ஆலங்குளம் பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயா்ந்து கிலோ ரூ.160-க்கு விற்பனையானதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரிய வெங்காயமும் கிலோ ரூ.50 வரை விற்பனையாகி வருகிறது.

கோப்புப்படம்

Published On :28 அக்டோபர் 2026, 2:21 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயா்ந்து கிலோ ரூ.160-க்கு விற்பனையானதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரிய வெங்காயமும் கிலோ ரூ.50 வரை விற்பனையாகி வருகிறது.

ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காய்கறிக் கடைகளில் கடந்த மாதம் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் கடந்த சில தினங்களாக தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ. 110 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் சிரமங்களைச் சந்தித்து வரும் பொதுமக்களுக்கு வெங்காயத்தின் விலை உயா்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினா் அதிக விலை கொடுத்து வெங்காயம் வாங்க முடியாமல் குறைந்த அளவிலேயே வாங்கிச் செல்கின்றனா். சிலா் சின்ன வெங்காயத்துக்குப் பதிலாக பெரிய வெங்காயத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

அதே நேரத்தில் வெண்டை ரூ. 10, சீனி அவரை ரூ. 15, தக்காளிப்பழம் ரூ. 10 என மலிவு விலையிலும் காய்கனிகள் ஆலங்குளத்தில் கிடைக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.