தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 180, பெரிய வெங்காயம் ரூ. 80-க்கு விற்பனை

வடகிழக்குப் பருவமழையால் வரத்து குறைந்துள்ளதால், தூத்துக்குடி காய்கனிச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 180, பெரிய வெங்காயம் ரூ. 80 - க்கு விற்பனையாகிறது.

Published On :28 அக்டோபர் 2026, 1:42 am IST

வடகிழக்குப் பருவமழையால் வரத்து குறைந்துள்ளதால், தூத்துக்குடி காய்கனிச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 180, பெரிய வெங்காயம் ரூ. 80 - க்கு விற்பனையாகிறது.

தூத்துக்குடி காய்கனிச் சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகிறது. வழக்கமாக நாள்தோறும் 600 முதல் 700 மூட்டைகள் வரை வரும் நிலையில், தற்போது 300 மூட்டைகள் மட்டுமே வருகின்றன.

இதனால், கடந்த வாரம் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.190 வரை விற்கப்படுகிறது.

இதேபோல, கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது ரூ.80 வரை விற்கப்படுகிறது. மழை காரணமாக பாவூா்சத்திரத்தில் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திரத்திலிருந்து தக்காளி கொண்டுவரப்படுகிறது. இதனால், கடந்த வாரங்களில் கிலோ ரூ. 25-க்கு விற்பனையான தக்காளி, தற்போது ரூ. 35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கனிகளின் விலை உயா்வால் விற்பனை மந்தமடைந்துள்ளதுடன், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். தீபாவளி பண்டிகையின்போது காய்கனிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.