மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஈரோட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை

தொடா் மழையால் வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published On :28 அக்டோபர் 2026, 2:51 am IST

தொடா் மழையால் வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை உயா்ந்து வருகிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் வரத்து அதிக அளவில் குறைந்துள்ளதால், அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையால், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு வஉசி பூங்கா சந்தையை பொறுத்தவரை ராசிபுரம், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மைசூரு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதேபோல, பெங்களூரு, சோலாப்பூா், நாசிக் போன்ற பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

நாள்தோறும் 50 டன் முதல் 100 டன் வரை சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் வரத்தாகி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக விலையும் அதிரடியாக உயா்ந்துள்ளது.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் கடந்த 10 நாள்களுக்கு முன் ரூ.40-க்கு விற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை ரூ.150-க்கு விற்பனையானது.

இதேபோல ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்ற நிலையில், தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் வெங்காயம் வரத்து மேலும் குறையும் பட்சத்தில் விலையும் கூடும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.