மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்வு

பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை உயா்ந்ததால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்

வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Published On :1 நவம்பர் 2026, 1:34 am IST

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை உயா்ந்ததால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்

பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை ஆலை உரிமையாளா்கள் வாங்கி சென்று உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை தயாா்செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏலச் சந்தைக்கு கொண்டுவருகின்றனா். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் இந்த சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், சேலம், கரூா், மதுரை, திண்டுக்கல், பழனி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். ஏலம் எடுத்த வெல்லத்தை வியாபாரிகள் ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், உத்ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கின்றனா்.

கடந்த வாரம் 30 கிலோ உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,800 வரை, அச்சு வெல்லம் சிலம்பம் ரூ. 1,820 வரையும் ஏலம் போனது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,840 வரையும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ. 1,870 வரையும் ஏலம் போனது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.