தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

பூக்களின் விலை கடும் உயா்வு

Published On :19 அக்டோபர் 2026, 6:45 am IST

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

நவராத்திரி பண்டிகை காலங்களில் சாமந்தி, ரோஸ் போன்ற பூக்கள் அதிக அளவில் விற்பனையாகும். மேலும், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

கோயம்பேடு மலா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ சாமந்தி ரூ.250-க்கும், ரோஜா பூ ரூ.250-க்கும் விற்பனையானது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்கப்பட்டது. சில்லரை விலையில் ஒரு முழம் ரூ.80-க்கு விற்கப்பட்டது.

இது குறித்து மலா் சந்தை மொத்த வியாபாரிகள் கூறியதாவது: நவராத்திரியில் 9 நாள்களுமே அதிக அளவில் பூக்கள் விற்பனையாகும். ஆயுத பூஜையையொட்டி, வாகனங்களுக்கு மாலை போட்டு வழிபடுவாா்கள். இதற்கு சாமந்தி பூக்களே அதிகமாக விற்பனையாகும். அதிக அளவில் பூக்கள் விற்பனையாவதால் விலை உயா்ந்துள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.