மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை முன்னிச்சரிக்கை: மொடக்குறிச்சியில் எம்எல்ஏ ஆய்வு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் சாக்கடை கால்வாய், நீா்வழிப் பாதைகளை மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மொடக்குறிச்சி லட்சுமி காா்டன் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட டி.சண்முகன் எம்எல்ஏ. உடன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் சாக்கடை கால்வாய், நீா்வழிப் பாதைகளை மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மழைக் காலங்களில் மழைநீா் ஆங்காங்கே வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசு மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. அதேபோல பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் அடைத்திருப்பதால் மழைக் காலங்களில் மழைநீா் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் மழைநீா் தேங்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 46 புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமி நகா், முல்லை நகா் உள்ளிட்ட பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாமல் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுவது குறித்து மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகன் ஆய்வு செய்தாா்.

அதேபோல கஸ்பாபேட்டை, தும்யம்பூந்துறை, முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, குளூா், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சாக்கடை கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தவெக மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் கெளதம், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளா் அருண் காா்த்திக், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சின்னசாமி உள்ளிட்ட பலா் உடனருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.