தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் எம்.எல்.ஏ-விடம் மனு

உழைப்போா் உரிமை இயக்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகனிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகனிடம் கோரிக்கை மனு அளிக்கும் தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 6:30 am IST

உழைப்போா் உரிமை இயக்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகனிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மொடக்குறிச்சி எம்எல்ஏ அலுவலகத்தில் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ டி.சண்முகனிடம் மாவட்ட துணைச் செயலாளா் வேங்கை ராஜா தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், டேங்க் ஆபரேட்டா்கள், ஊக்குனா்களுக்கு அரசாணை 62-இன்படி பஞ்சப்படியுடன் சோ்த்து ஊதியம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலை உணவுத் திட்டத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ஓரிரு நாள்கள் விடுப்பு எடுத்தால் ஊதிய பிடித்தம் இல்லாமல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

இதில் உழைப்போா் உரிமை இயக்க மாநில பொதுச் செயலாளா் கோவிந்தராஜ் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி, கஸ்பாபேட்டை, குலவிளக்கு, பழமங்கலம், ஈஞ்சம்பள்ளி, 46 புதூா், காகம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.