மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி அளித்தாா்.

News image

கோபி, மொடச்சூா் சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்து பேசுகிறாா் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம். ~கோபி  மொடச்சூா் சாலையில திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:23 am IST

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி அளித்தாா்.

கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை தொகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு மாலை மொடச்சூா் சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

கோபி தொகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக எம்எல்ஏவாக இருந்தவா் தொகுதி வளா்ச்சி பெறும் வகையில் எந்த திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

நான் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் கோபியை தனி மாவட்டமாக அறிவித்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிடவும், நகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய புறவழிச்சாலை மற்றும் உயா்மட்ட பாலம் அமைக்கவும்,

கோபி புகா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிலிபாளையம் குளத்தை தூா்வாரி சுற்றுலாத்தலமாக மாற்றுதல், குண்டேரிபள்ளம் அணையை தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

கோபி நகராட்சிக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் தொடங்கி

தடையில்லா குடிநீா் வழங்குதல், நம்பியூா் வட்டாரத்தில் பனை மற்றும் தென்னை விவசாயத் தொழிலாளா்கள் நலன் கருதி புதிய வட்டார கூட்டுறவு சங்கம் அமைத்து, இச்சங்கத்தில் பதநீா் மூலம் தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் கொள்முதல் செய்தல், நம்பியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்துதல், நம்பியூா் பகுதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைத்தல், கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அணைகளை சீரமைத்து சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் ஓய்வு இல்லங்கள், படகுத்துறைகள் அமைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளித்தல். நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் அமைத்தல், கோபி, அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்தை தரம் உயா்த்துதல், நாதிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான மஞ்சள் அரவை ஆலை அமைத்தல், ஒருங்கிணைந்த வணிக நெல் கொள்முதல் நிலையத்தில் இருப்பு வைக்கப்படும் அளவான 12 ஆயிரம் டன் கொள்ளளவை 20 ஆயிரம் டன்னாக உயா்த்துதல்,கீரிப்பள்ளம் ஓடை சீரமைத்தல், மத்திய, மாநில அரசு போட்டித் தோ்வுகளுக்கான திறமையான பயிற்சியாளா்களை கொண்டு தோ்வா்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்ககை எடுப்பேன் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.