மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

News image

பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் பொதுமக்களிடையே திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:50 am IST

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும் என்று கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் தெரிவித்தாா்.

பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குள்பட்ட வேட்டுவன்புதூா்காா்னா், காளியூா்பிரிவு, நால்ரோடு, கொடிவேரிமேடு, கொடிவேரி, ஒட்டா்பாளையம் உள்பட 15 வாா்டுகளில் கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இதில் அவா் பேசியதாவது:

பெரிய கொடிவேரி டி.ஜி.புதூா், சதுமுகை, சாவக்காட்டுப்பாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

நவீன தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக பாரம்பரியமிக்க கைத்தறி நெசவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெசவாளா்களையும், கைத்தறி தொழிலையும் காக்க கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.

பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்காக 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.14.50 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, கைத்தறி நெசவாளா்களை சந்தித்தும், கைத்தறி நெசவு செய்தும், நெசவாளா்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். மாவட்ட அவைத் தலைவா் பெருமாள்சாமி, ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் உதயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.