அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோபியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு உறுதியளித்தாா்.
கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, கோபி அருகே குள்ளம்பாளையத்தில் நடைபெற்ற தொழில் முனைவோா் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
நான் வெற்றிபெற்றவுடன், கோபி தொகுதியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வரவும், நகரில் நெரிசலை குறைக்க புறவழிச் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கவும், புதிய பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தொழில் முனைவோருக்கு அரசு சாா்பில் கடனுதவி வழங்கவும், ஜிஎஸ்டியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் நம்ம கோபி ஃபவுண்டேஷன் அமைப்பினரிடம் வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
இந்நிகழ்ச்சியில், தொழில் முனைவோா் அமைப்பின் தலைவா் சரவணன், செயலா் சபரிபிரசாத், இயக்குநா் நந்தகுமாா், முன்னாள் தலைவா் வாசு டிரைவிங் ஸ்கூல் வாசுதேவன், முன்னாள் செயலாா் யாசிகா சிஸ்டம்ஸ் சுரேஷ், டாக்டா் அனூப், ஹரிணி சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்

குடிநீா், சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தேன்! பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

