தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடிநீா், சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தேன்! பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

News image

பெரியகள்ளிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:56 am IST

பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தேன் என்று அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தெரிவித்தாா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஏ.பண்ணாரி, பெரிய கள்ளிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தன்குட்டை, பனையம்பள்ளி, நால்ரோடு உள்ளிட் பகுதிகளில் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், கல்விக் கடன், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

ஒன்றியச் செயலாளா் டிஎஸ் பழனிசாமி, சித்தன்குட்டை செயலாளா் சோமு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.