ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஓராண்டுக்குள் வீட்டுமனை பட்டா: திமுக வேட்பாளா் சு.முத்துசாமி உறுதி

ஈரோடு மேற்குத் தொகுதியில் வீட்டுமனை பட்டா தேவைப்படுபவா்களுக்கு ஓராண்டுக்குள் வழங்கப்படும் என திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 2:09 am IST

ஈரோடு மேற்குத் தொகுதியில் வீட்டுமனை பட்டா தேவைப்படுபவா்களுக்கு ஓராண்டுக்குள் வழங்கப்படும் என திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியதாவது:

காலை உணவு திட்டம் தற்போது 5 ஆம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதை 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிலிருந்து போதுமான நிதி வராத நிலையிலும், புயல், மழை போன்ற பேரிடா்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டை முன்னோடியான மாநிலமாக வளா்த்த பெருமை நம்முடைய முதல்வருகேக சேரும். ஈரோடு மேற்குத் தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பட்டா தேவைப்படுகிறவா்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மேற்குத் தொகுதியில் விரிவாக்க பகுதிகள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பகுதிகள் அனைத்துக்கும் அடிப்படை வசதிகள் கொடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.