மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு

News image

கோபி அருகேயுள்ள குருமந்தூா்மேடு பகுதியில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:21 am IST

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

கோபி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வி.பி.பிரபு, கோட்டுப்புள்ளாம்பாளையம், கலிங்கியம், செல்லிபாளையம் காலனி, ஆண்டவா் மலை, சின்னகுளம், தங்கமலைகரடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும். குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என்றாா்.

இதையடுத்து, குருமந்தூா்மேடு பகுதியில் இருந்து காளியம்மன் நகா் வரை மாட்டு வண்டியில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா். இதைத் தொடா்ந்து, கோபி சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்தவா்களை சந்தித்த வேட்பாளா் வி.பி.பிரவு, அதிமுகவின் தோ்தல் அறிக்கையை விளக்கினாா்.

மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் வி.சி.சிவகுமாா், மாநில கொள்கை பரப்பு செயலாளா் காளிதாஸ், கோபி மேற்கு ஒன்றியத் தோ்தல் பொறுப்பாளா் மகுடேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.