அஸ்ஸாமில் இருந்து ஈரோடு வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அதில் ரயில்வே போலீஸாா் சோதனை செய்தபோது முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரின்றி கிடந்த பை ஒன்றை சோதனை செய்தனா். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை, ஈரோடு மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யாா்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

