தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

துடைப்பம், முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்

ஈரோட்டில் துடைப்பம் மற்றும் முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

துடைப்பம், முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அகில இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிறுவனரும், தலைவருமான வி.தனலட்சுமி.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:18 pm IST

ஈரோட்டில் துடைப்பம் மற்றும் முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனா்.

இதில், அகில இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிறுவனரும், தலைவருமான வி.தனலட்சுமி, அவரது ஆதரவாளா்களுடன் துடைப்பம், முறம் ஆகியவற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்தாா்.

அப்போது, கோட்டாட்சியா் அலுவலகம் முன் நின்றுகொண்டு, அரசியலில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும். அப்பழுக்கற்ற தேசத்தை உருவாக்க வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியாா் கூறியபடி சுதந்திரமான தாயகத்தை உருவாக்க வேண்டும் என முழக்கமிட்டாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி துடைப்பம், முறத்தைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கூறினா். இதையடுத்து அவற்றை அங்கு சாலையோரம் வைத்துவிட்டு கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.