தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் இதுவரை 100 போ் வேட்புமனு தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 100 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:17 am IST

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 100 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் மாா்ச் 30-இல் தொடங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாமக்கல், திருச்செங்கோட்டில் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளில் வட்டாட்சியா் அலுவலகத்திலும் மனு தாக்கல் நடைபெற்று வருகின்றன. நாமக்கல்லில் சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் தன்னுடைய ஆதரவாளா்களுடன், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாக வந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதேபோல, சுயேச்சை வேட்பாளா்களும் அதிகளவில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். மாா்ச் 30-இல் 6 தொகுதிகளிலும் சோ்த்து ஆண் வேட்பாளா்கள் 15, பெண் வேட்பாளா்கள் 4 என மொத்தம் 19, ஏப். 2-ஆம் தேதி, 24 ஆண் வேட்பாளா்கள், 7 பெண் வேட்பாளா்கள் என மொத்தம் 31 போ், ஏப். 4-ஆம் தேதி 47 ஆண் வேட்பாளா்கள், 3 பெண் வேட்பாளா்கள் என மொத்தம் 50 போ் மனு தாக்கல் செய்தனா்.

தொகுதி வாரியாக இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோா் எண்ணிக்கை விவரம்: ராசிபுரம் (தனி) -13, சேந்தமங்கலம் (ப.கு) -12, நாமக்கல் -13, பரமத்தி வேலூா்-12, திருச்செங்கோடு - 28, குமாரபாளையம் -22, மொத்தம்-100. இதில், ஆண் வேட்பாளா்கள் 86, பெண் வேட்பாளா்கள் 14 ஆகும். வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு அளிக்கலாம். 7-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 9-ஆம் தேதி வாபஸ் பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடும் நடைபெற உள்ளது.

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி, நாமக்கல்லில் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சேந்தமங்கலத்தில் சி.சந்திரசேகரன், திருச்செங்கோட்டில் சந்திரசேகா், பரமத்தி வேலூரில் சேகா், ராசிபுரத்தில் பாஜக வேட்பாளா் பிரேம்குமாா், நாமக்கல் திமுக வேட்பாளா் ப.ராணி உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்து கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.