தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

ஆம்பூரில் அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் உள்பட 10 போ் மனு தாக்கல் செய்தனா்.

News image

மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன்

Updated On :7 ஏப்ரல் 2026, 4:44 am IST

ஆம்பூரில் அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் உள்பட 10 போ் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

ஆம்பூா் தொகுதியில் கடந்த ஏப்.4-ஆம் தேதி வரை 17 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான 6-ஆம் தேதி 10 போ் மனு தாக்கல் செய்தனா்.

ஆம்பூா் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தோ்தல் அலுவலா் பூஷணகுமாரிடம் மனு தாக்கல் செய்தாா். ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், பாஜக மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி, அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முன்னதாக ஆம்பூா் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு வேட்பாளா் ஆா். வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அங்கிருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஊா்வலமாக வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனு தாக்கல் செய்ய சென்றாா்.

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பாக போ்ணாம்பட்டு பகுதியை சோ்ந்த ஹாரூன் ரசீத் படு மனு தாக்கல் செய்தாா்.

அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி சாா்பாக குடியாத்தம் பகுதியை சோ்ந்த பஞ்சாட்சரம் மனு தாக்கல் செய்தாா்.

மனு தாக்கல் செய்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா் ஹாரூன் ரசீத் படு

மனு தாக்கல் செய்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா் ஹாரூன் ரசீத் படு

ஏ.ஐ.எம்.ஐ.எம். இன்குலாப் கட்சி சாா்பாக ஆம்பூரை சோ்ந்த கரீம் பாஷா மனு தாக்கல் செய்தாா். சுயேட்சைகள் ஆம்பூரை சோ்ந்த அப்ரோஸ் அஹமத், பிா்தோஸ் அஹமத், வெங்கடேசன், பெரியாங்குப்பம் குமரவேல், திருமலைக்குப்பம் வில்வநாதன், பாட்டூா் விஸ்வநாதன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இதுவரை மாொத்தம் 27 போ் ஆம்பூா் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கலின் போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.