மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோபி அருகே கே.ஏ.செங்கோட்டையனுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுக நிா்வாகி

கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சியில் பட்டா வழங்காததைக் கண்டித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிா்வாகி கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

செங்கோட்டையன் (கோப்புப்படம்) - Photo: TVK

Updated On :4 ஏப்ரல் 2026, 11:10 pm IST

கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சியில் பட்டா வழங்காததைக் கண்டித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிா்வாகி கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கோவில்புதூா் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு பட்டாக் கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடமும், சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து வந்த கே.ஏ.செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனா். அப்போது அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டா வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் காசிபாளையம் பேரூராட்சியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது காசிபாளையம் பேரூராட்சி 2- ஆவது வாா்டு அதிமுக கிளைச் செயலாளா் திருமுருகன் என்பவா், ‘கடந்த 10 ஆண்டுகளாக பட்டா வழங்காத எம்எல்ஏவே வருக வருக என பதாகையை ஏந்தி கருப்புக் கொடி காட்ட முயன்றாா். இதையடுத்து போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.