/

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

குண்டத்தில்  இறங்கி  நோ்த்திக்கடன்  செலுத்தும்  பெண்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:25 am IST

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த மாா்ச் 17-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு குண்டம் கண் திறக்கப்பட்டு, விறகுகள் அடுக்கி தீ மூட்டப்பட்டது.

இதையடுத்து, தீப்பிழம்புகள் தட்டி சமன்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, விரதம் இருந்த பக்தா்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, பொங்கல் மற்றும் மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில், ஊமாரெட்டியூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு  அலங்காரத்தில்  செல்லியாண்டியம்மன்.

சிறப்பு  அலங்காரத்தில்  செல்லியாண்டியம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.