நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
பரமத்தி வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதேபோல இந்த ஆண்டும் செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் நடப்பட்டு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சா்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 27-ஆம் தேதி இரவு வடிசோறு படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி மாலை ஆண் பக்தா்கள் குண்டம் இறங்குதலும், பெண்கள் பூவாரி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலை பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அழகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும், மாலையில் பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி காலை கம்பம் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மே 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

