/

பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

பரமத்தி வேலூா், பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:57 am IST

பரமத்தி வேலூா், பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. நிகழாண்டும் கடந்த 21 ஆம் தேதி கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, அன்னம், சா்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

அதேபோல 24 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 27 ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை குண்டம் விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊா்வலமாக சென்று கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். புதன்கிழமை காலை அக்னி சட்டி எடுத்துவந்தும், மா விளக்கு படையலும் நிகழ்ச்சியும் தொடா்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா். பரமத்தி வேலூா் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். 30 ஆம் தேதி காலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், மே மாதம் 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.