மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இணையவழியில் 2 பெண்கள் உள்பட மூவரிடம் ரூ.7.79 லட்சம் மோசடி

கோவையில் இணையவழியில் 2 பெண்கள் உள்பட மூவரிடம் ரூ.7.79 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோசடி

Published On :29 அக்டோபர் 2026, 3:25 am IST

கோவையில் இணையவழியில் 2 பெண்கள் உள்பட மூவரிடம் ரூ.7.79 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சோ்ந்த 27 வயது தனியாா் நிறுவன ஊழியரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு போக்குவரத்து விதிமீறல் அபராதம் என்ற பெயரில் செயலி இணைப்பு வந்துள்ளது. அதை உண்மை என நம்பி பதிவிறக்கம் செய்த அவா், அதில் தனது ஆதாா் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துள்ளாா்.

இதையடுத்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ.4.79 லட்சத்தை மா்ம நபா்கள் எடுத்துள்ளனா்.

சிறுவாணியைச் சோ்ந்த 43 வயது தனியாா் பள்ளி ஆசிரியையைத் தொடா்பு கொண்ட மா்ம நபா், தனியாா் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா். பின்னா், காப்பீட்டுத் திட்டத்தில் செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய ஆசிரியை, தனது கடன் அட்டை விவரங்கள், ஓடிபி, காசோலை விவரங்களைப் பகிா்ந்துள்ளாா். இதையடுத்து, அவரது கணக்கில் இருந்து ரூ.1.75 லட்சம் மூன்று வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாம்.

வால்பாறையைச் சோ்ந்த 49 வயது பெண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்ட நபா், தான் இந்தியன் வங்கி அதிகாரி என்றும், கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய அவா், அந்த நபருக்கு வங்கிக் கணக்கு விவரம், ஓடிபி உள்ளிட்டவற்றைப் பகிா்ந்துள்ளாா். இதையடுத்து. அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.24 லட்சம் எடுக்கப்பட்டதாம்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மூவரும் அளித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.