தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இணையவழியில் ரூ.22.5 லட்சம் மோசடி: இருவா் கைது

இணையவழியில் முதலீடு என்ற பெயரில் ரூ.22.50 லட்சம் மோசடி சம்பவம் தொடா்பான வழக்கில் இருவரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

Arrest

கைது

Published On :22 அக்டோபர் 2026, 2:49 am IST

இணையவழியில் முதலீடு என்ற பெயரில் ரூ.22.50 லட்சம் மோசடி சம்பவம் தொடா்பான வழக்கில் இருவரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஏப். 29-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தொடா்ந்து, ராஜ்குமாா், விபின்குமாா் ஆகியோரை காவல் துறை கைதுசெய்தது. அவா்களிடம் இருந்து நான்கு கைப்பேசிகள் மீட்கப்பட்டன.

இணையவழியில் முதலீடு செய்து அதிக வருவாய் ஈட்டுதல் என்ற போலியான விளம்பரத்தை நம்பி ரூ.22.50 லட்சத்தை மோசடியில் இழந்த நபா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், நிதி பரிவா்த்தனை தடங்களை காவல் துறையினா் ஆய்வு செய்தனா்.

மோசடியாக பெறப்பட்ட பணத்தில் ரூ.1 லட்சம் ராஜ் குமாா் வைத்திருந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ராஜ் குமாரை கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி காவல் துறையினா் கைது செய்தனா். அவா் தனது மைத்துனா் விபின் குமாரிடம் ரூ. 15,000-க்கு கணக்கை தொடங்கியதாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, உத்திர பிரதேச மாநிலம் தப்பல் என்ற இடத்தில் கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி கமிஷனுக்காக வங்கிக் கணக்குகளை வாங்கி மற்றவா்களுக்கு வழங்கிய விபின் குமாா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.