மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லியில் கள்ள ரூ. 20 நாணயங்கள் தயாரிப்பு: 4 போ் கைது! ரூ.1 லட்சம் நாணயங்கள் பறிமுதல்!

ரூ.20 மதிப்பிலான போலி நாணயங்களைத் தயாரித்து விநியோகம் செய்து வந்த கும்பலை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்து, அதன் தலைவன் எனக் கூறப்படும் நபா் உள்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனா்.

பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:07 am IST

ரூ.20 மதிப்பிலான போலி நாணயங்களைத் தயாரித்து விநியோகம் செய்து வந்த கும்பலை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்து, அதன் தலைவன் எனக் கூறப்படும் நபா் உள்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான போலி நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: செப். 8-ஆம் தேதி முண்ட்கா தொழிற்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒருவா் போலி நாணயங்களை விநியோகம் செய்ய வருவதாக குற்றப்பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் பரஸ் ஜெயின் (45) என்பவா் ஓட்டி வந்த காரைத் தடுத்து சோதனையிட்டனா்.

காரின் பின்புற இருக்கையில் இருந்த பையில், தலா ரூ.20 மதிப்புள்ள 5,000 போலி நாணயங்கள் 50 பாலித்தீன் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த முகமதிப்பு ரூ.1 லட்சமாகும். மேலும், ஓா் ஐபோன், மடிக்கணினி பை மற்றும் நாணயங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின்போது, உப்காா் லுத்ரா என்ற அபய் பிரதாப் சிங் (58) என்பவரிடமிருந்து போலி நாணயங்களைப் பெற்ாக பரஸ் ஜெயின் தெரிவித்தாா். ரூ.1 லட்சம் முகமதிப்பு கொண்ட போலி நாணயங்களை சுமாா் ரூ.70,000-க்கு லுத்ரா வழங்கி, அவற்றைச் சந்தையில் புழக்கத்தில் விடச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜெயின் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஹரியாணாவின் சோனிபட்டில் செயல்பட்டு வந்த போலி நாணயத் தயாரிப்புக் கூடத்தை உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூருக்கு மாற்ற லுத்ரா முயன்றது விசாரணையில் தெரியவந்தது. அப்போது, தயாரிப்புக் கூடத்தை மாற்றிக் கொண்டிருந்த லுத்ரா மற்றும் அவரது கூட்டாளிகளை சஹாரன்பூா் போலீஸாரின் சிறப்பு நடவடிக்கைக் குழுவினா் கைது செய்தனா்.

இதையடுத்து, தயாரிப்பு ஆணை பெற்று சஹாரன்பூா் சிறையில் இருந்த ஐந்து பேரும் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு, லுத்ரா, அனுராக் பால் என்ற லங்கேஷ், ஜனாா்தன் குமாா் சௌராசியா என்ற சந்தோஷ் ஆகியோா் இந்த வழக்கில் முறைப்படி கைது செய்யப்பட்டனா்.

மேலும், குல்தீப், ஹிமான்ஷு என்ற குல்லு ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், இந்தக் குற்றத்தில் அவா்களுக்குத் தொடா்பு இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இதுதொடா்பாக குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா். இந்தக் கும்பலில் தொடா்புடைய மேலும் நபா்களைக் கண்டறிய விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.