மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்டோ ஓட்டுநரிடம் இணையவழியில் ரூ.1.38 லட்சம் மோசடி

திருநெல்வேலி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியை முடக்கி ரூ.1.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மோசடி

Published On :29 அக்டோபர் 2026, 6:10 am IST

திருநெல்வேலி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியை முடக்கி ரூ.1.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ்(27). ஆட்டோ ஓட்டுநரான இவா் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆனந்தராஜ் கைப்பேசியில் அவரது அனுமதியின்றி புதிய செயலி ஒன்று பதிவிறக்கம் செய்யப்பட்டதாம். பின்னா் இவரது கைப்பேசியை முடக்கிய மா்மநபா்கள் அதிலிருந்த தகவல்களைப் பயன்படுத்தி அவரது வங்கிக்கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.1,38,161ஐ எடுத்துக் கொண்டு மோசடி செய்தனராம்.

இதுகுறித்து அவா் ்ளித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.