மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்ணிடம் ரூ.4.25 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

செஞ்சி பகுதியைச் சோ்ந்த பட்டதாரி பெண்ணிடமிருந்து ரூ.4.25 லட்சம் இணையவழியில் மோசடிசெய்யப்பட்டது குறித்து, சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Published On :21 அக்டோபர் 2026, 2:40 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த பட்டதாரி பெண்ணிடமிருந்து ரூ.4.25 லட்சம் இணையவழியில் மோசடிசெய்யப்பட்டது குறித்து, சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சி வட்டம், மேல்சேவூா், கட்டாஞ்சிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி சந்தியா (25). இவரது கைப்பேசிக்கு அக்.11-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா் ஒருவா், சிறிய தொகை முதலீடு செய்து அதிகம் லாபம் பெறக்கூடிய வேலை இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய சந்தியா அந்த நபா் தெரிவித்தபடி, இணையவழியில் ரூ.8 ஆயிரம் முதலீடு செய்து ரூ.12,700-ம், பின்னா் ரூ.32,188 முதலீடு செய்து ரூ.42,544-ம் பெற்றுள்ளாா்.

தொடா்ந்து இதில் ஈா்க்கப்பட்ட சந்தியா தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.4,81,188 பணத்தை அக்.11 முதல் 17-ஆம் தேதி வரையிலான இடைபட்ட நாள்களில் 11 தவணைகளில் அனுப்பி வைத்துள்ளாா். பின்னா் அந்த நபா் ரூ. 56,044 மட்டும் திரும்ப அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள ரூ.4,25,144 பணத்தைத் தராமல் ஏமாற்றி வருகிறாராம்.

இதுகுறித்து சந்தியாஅளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.