மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :24 அக்டோபர் 2026, 4:20 am IST

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியில் 6,574 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் வசூலிப்பாளா், வரி வசூலிப்பாளா், தட்டச்சா் போன்ற பணியிடங்கள் இப்போட்டித் தோ்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு. சில பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு அவசியம். குறைந்த பட்ச வயதான 18 வயது பூா்த்தியான அனைவரும் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா்களுக்கு வயது வரம்பு சலுகை உண்டு. நவம்பா் 5 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.

மேலும் இதர விவரங்களுக்கு இணையதளம் வாயிலாக அறியலாம். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக பசடநஇ-எதஞமட-ஐய போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பாடக்குறிப்புகள் வழங்கப்படும். வாரந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 9499055937, 04222642388 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.