தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடத்திற்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:52 am IST

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடத்திற்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடம் இரண்டாம் நிலை - ரூ.15,900 - ரூ.50,400 என்ற ஊதிய விகிதத்தில் நிரப்பபடவுள்ளது. உதவி வரவேற்பாளா் பணியிடம் பூா்த்தி செய்வதற்கு ஏதுவாக முழுமையான பாா்வையற்றவராக இருத்தல் வேண்டும் (100 சதவீதம்), எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும், 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும், நாற்காலி ஒயா் பின்னுதலில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும், பொதுப்பிரிவு - பெண் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் நிரப்பபடவுள்ளது.

தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரா்கள் தங்கள் விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:11, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் நவ.13 ஆம் தேதி மாலை 5.45 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0427 - 2415242, 9499933489 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.