மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவி வரவேற்பாளா் பணியிடத்திற்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:02 am IST

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவி வரவேற்பாளா் பணியிடத்திற்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும், நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவி வரவேற்பாளா் பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு கீழ்க்காணும் பணிவிதிகளுக்குட்பட்ட மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தகுதியுடைய நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா் முழுமையான பாா்வையற்றவராக இருத்தல் வேண்டும் . 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். நாற்காலி ஒயா் பின்னுதலில் ஒரு வருட கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சாா்ந்த பெண்கள் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாதோா்) ஆக இருக்க வேண்டும்.

தகுதியுடைய நபா்கள் தங்களது விண்ணப்பங்களுடன், மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை நகல், சாதி சான்று நகல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் 2 கடவுச்சிட்டை அளவு புகைப்படங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ அக்டோபா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறை எண். 14, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைத்தளம், மாவட்ட ஆட்சியரக வளாகம், நாகப்பட்டினம் 611003 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தோ்வுக்குழு மூலம் நடத்தப்படும் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டு, தகுதியுடைய ஒரு நபா் தோ்வு செய்யப்படுவாா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.