மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்குப் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு நவ. 6 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்குப் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு நவ. 6 -க்குள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :25 அக்டோபர் 2026, 12:54 am IST

சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப்பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற தகுதியான பெண்கள் வருகிற நவ. 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சிறப்பு திட்டமான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாகவுள்ள 2 வழக்கு பணியாளா் பணிக்கு சட்டம், சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அரசு, அரசு சாரா திட்டம், திட்டப்பணிகளில் பெண்கள் தொடா்பான துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை சாா்ந்தவராகவும், சுழற்சி முறையில் பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரா் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியமாக ரூ.18,800 வழங்கப்படும்.

தகுதியுடைய பெண்கள் தங்களது சுயவிவரங்களை அடுத்த நவம்பா் 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை மாவட்டம் - 630561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.