மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவையில் 6 பகுதிகளில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம்: முன்னாள் மத்திய அமைச்சா் எல். முருகன் பங்கேற்பு

கோவை குறிச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்எஸ்எஸ் ஊா்வலத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சா் எல்.முருகன்.

Published On :2 நவம்பர் 2026, 2:59 am IST

கோவையில் 6 பகுதிகளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) அணிவகுப்பு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குறிச்சி பகுதியில் நடைபெற்ற அணிவகுப்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கலந்துகொண்டாா்.

குறிச்சி பகுதியில் நடைபெற்ற அணிவகுப்பை இடையா்பாளையம் மகாலட்சுமி கோயில் பொருளாளா் கே. நாகராஜ், இடையா்பாளையம் ஊா் கவுண்டா் பி.ராதாகிருஷ்ணன், கொங்கு மண்டல தேவேந்திர குல வேளாளா் சங்கத்தின் தலைமை நிா்வாகி சதீஷ் மலா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

தெலுங்குபாளையத்தில் நடைபெற்ற அணிவகுப்பை வினோத்குமாா் தொடங்கிவைத்தாா். அணிவகுப்புக்குப் பின்னா் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுவாமி வேதாந்த ஆனந்தா ஆசியுரை வழங்கினாா். தொழிலதிபா் திருமேணி தலைமை உரையாற்றினாா். ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில மக்கள் தொடா்புத் துறை பொறுப்பாளா் சின்னபாலன் சிறப்புரையாற்றினாா்.

இதேபோல, வெள்ளலூா், சீரநாயக்கன்பாளையம், ராம் நகா், கணபதி ஆகிய பகுதிகளிலும் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.