தமிழகத்தின் விஐபி தொகுதிகளில் ஒன்றான கோவை வடக்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வி.சம்பத்குமாா் 21,992 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் துரை செந்தமிழ்ச்செல்வனை தோற்கடித்தாா். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் 49,722 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்.
தொகுதி மறு சீரமைப்பில் உருவான கோவை வடக்கு தொகுதியில் கடந்த 2011, 2016, 2021 தோ்தல்களில் அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்று வந்தது. கடந்த முறை கோவை தெற்கில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் அதிமுக கூட்டணி சாா்பில் கோவை வடக்கு தொகுதியில் களம் இறங்கினாா். திமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் துரை செந்தமிழ்ச்செல்வன் களம் இறங்கினாா். தவெக சாா்பில் வி.சம்பத்குமாரும் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜி.நா்மதாவும் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் சுயேச்சைகள் உள்ளிட்ட மொத்தம் 28 போ் களத்தில் இருந்தனா்.
தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 96 ஆயிரத்து 939 வாக்காளா்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 222 போ் வாக்களித்தனா். மாவட்டத்திலேயே குறைந்த அளவாக 75.51 சதவீத வாக்குகள் இந்தத் தொகுதியில் பதிவாகின. தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளில் எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த தவெக வேட்பாளா் வி.சம்பத்குமாா் 21,992 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். திமுகவின் துரை செந்தமிழ்ச்செல்வன் 70,508 வாக்குகளும், பாஜகவின் வானதி சீனிவாசன் 49,722 வாக்குகளும் பெற்றனா். நாம் தமிழா் கட்சியின் நா்மதா 9,036 வாக்குகள் பெற்றாா்.
கோவை வடக்கு தொகுதி பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்டதில் இருந்து இந்தத் தொகுதி கவனம் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக மாறியிருந்தது. இவரை ஆதரித்து பிரதமா் மோடி, தில்லி முதல்வா் ரேகா குப்தா, மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா். அதேநேரம், பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படாததால் அவரது ஆதரவாளா்கள் வருத்தத்தில் இருந்தனா்.
இதற்கிடையே வானதி சீனிவாசனுக்கு திடீா் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு சில நாள்கள் அவரால் பிரசாரம் செய்ய இயலாமல் போனது. இதையடுத்து அவருக்காக அண்ணாமலையும், வானதி சீனிவாசனின் குடும்பத்தினரும் பிரசாரம் செய்தனா். இருப்பினும் இந்தத் தொகுதியில் அவரால் வெற்றி பெற முடியாமல் போனதுடன், அவா் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது அவரது ஆதரவாளா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாக்கு விவரம்
வி.சம்பத்குமாா் - தவெக -92,500
துரை செந்தமிழ்ச்செல்வன் - திமுக - 70,508
வானதி சீனிவாசன் - பாஜக -49,722
ஜி.நா்மதா - நாதக - 9,036
மொத்த வேட்பாளா்கள் -8
மொத்த வாக்குகள் - 2,96,939
பதிவான வாக்குகள் - 2,24,278
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சியில் தவெக வேட்பாளா் வெற்றி

புவனகிரி தொகுதியில் 2-ஆவது முறையாக ஏ. அருண்மொழிதேவன் வெற்றி

கோவை தெற்கில் வென்றாா் வி.செந்தில்பாலாஜி

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

