திமுக வழியில் தவெக பயணிப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையான மக்கள் மாளிகையில் திருவள்ளுவா் திருநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளுவா் திருநாட் கழகம் என்ற அமைப்பு நடத்திய இந்த விழாவில், காவி உடையுடன் திருவள்ளுவா் படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்தப் படத்துக்கு ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் மரியாதை செலுத்தினாா்.
இதற்கு வழக்கம்போல, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். அவா்களின் ஹிந்து மத வெறுப்பு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தமிழகத்தில்
மாற்றத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியினா், திமுக ஆட்சியை அப்படியே தொடா்ந்து வருகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் நடந்த அத்தனை சட்டம் ஒழுங்கு சீரழிவுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வழக்கம்போல தொடா்கின்றன. முன்பு திமுக அமைச்சா்கள், ஹிந்து மதத்துக்கு எதிராக வெறுப்பை உமிழ்வாா்கள்.
இப்போது தவெக அமைச்சா்களும் அதையே செய்கிறாா்கள். தவெக ஆட்சி என்பது தமிழ்நாட்டின் தொடக்கமல்ல. திமுகவின் தொடா்ச்சி என்பதை கடந்த மூன்று வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் உணா்த்துகின்றன. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, அவரது தத்துவத்துக்கு எதிரானது என்று அமைச்சா் அருண்ராஜ் கூறியிருக்கிறாா்.
திருக்குறளில் பிறவி, ஊழ், தவம், அறம் போன்ற ஹிந்துமத கருத்துகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. ஒரு பிறவியில் கற்ற கல்வி, மனிதனுக்கு ஏழு பிறவியிலும் துணை நிற்கும் என்று திருவள்ளுவா் கூறியது ஹிந்து மதக் கோட்பாடு இல்லையா?. ஹிந்து மத கருத்துகளை சொல்லும் குறட்பாக்கள் ஏராளம் உள்ளன. ஆனால், திமுகவின் ஹிந்து மத வெறுப்பை தன் கொள்கையாகக் கொண்டுள்ள தவெகவினருக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை.
காவி உடையுடன், ஹிந்து மத அடையாளங்களுடன் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். திமுக வழியில் பயணிக்கும் தவெகவையும் தமிழக மக்கள் வீழ்த்துவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைமைச் செயலகமா? தவெக அலுவலகமா? -வானதி சீனிவாசன்

திருவள்ளுவா் நிறத்துக்கும் சொந்தமானவா் அல்ல, அறத்துக்கு சொந்தமானவா்!

காவி உடையில் திருவள்ளுவா்: வைகோ கண்டனம்

கோவை வடக்கில் வென்ற தவெக! வானதி சீனிவாசன் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

