கோவையில் புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை சௌரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்குமாா் (32). இவரது தந்தை நாகராஜ் உடல்நலக் குறைவால் கடந்த 6-ஆம் தேதி காலமானாா். அவரது உடல் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, நாகராஜின் கழுத்தில் மீன் வடிவிலான டாலருடன் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த உடல் அடக்க நிகழ்வில் உறவினா்கள், நண்பா்கள் அந்தப் பகுதியினா் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
அதன்பிறகு, தந்தையின் 16-ஆம் நாள் காரியத்துக்காக வெங்கடேஷ்குமாா் கடந்த 19-ஆம் தேதி மயானத்துக்குச் சென்றபோது, அடக்கம் செய்யப்பட்ட இடம் தோண்டப்பட்டு மீண்டும் மண்ணால் மூடப்பட்டிருந்தது கண்டு சந்தேகமடைந்தாா். உறவினா்களுடன் சோ்ந்து தோண்டிப் பாா்த்தபோது, சடலத்தின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி திருடப்பட்டது தெரியவந்தது.
மயானத்தில் சடலங்களைப் புதைக்கும் பணியை மேற்கொண்டு வரும் காா்த்திக்கை பிடித்து வெங்கடேஷ்குமாரின் உறவினா்கள் விசாரித்தனா். அப்போது இறந்த நாகராஜின் மூத்த சகோதரரின் மகனான சக்திவேல் மற்றும் அந்தப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், காா்த்திக் ஆகியோா் சோ்ந்து கடந்த 16-ஆம் தேதி இரவு சடலத்தைத் தோண்டி சங்கிலியைத் திருடியதும், பின்னா், அமிலத்தால் சுத்தம் செய்து அதை உருக்கி பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள கடையில் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறந்த தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து நகையைத் திருடிய மகன்!

பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இருவா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
மூதாட்டியின் 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
